பிள்ளையார் நோன்பு 2024 Pillayar Nonbu 2024

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!


ஹூஸ்டன் வரவேற்கிறது

அன்புடைய தென்மத்திய நகரத்தார் பெருமக்களே,
வணக்கம்,
எதிர்வரும் 2024ம் ஆண்டின் பிள்ளையார் நோன்பினை ஹூஸ்டன் நகரத்தார்கள் ஒரு நாள் நிகழ்வாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்வானது வரும் மார்கழித் திங்கள் 13 சனிக்கிழமை (டிசம்பர் 28) பிற்பகல் முதல் 14 ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) முற்பகல் வரை ஹூஸ்டன் இன்டர்கான்டினென்டல் விமான நிலையம் அருகாமையில் அமைந்துள்ள ஹையாட் ரீஜென்சி விடுதியில் நடைபெறவுள்ளது.
பண்பாடு, கொண்டாட்டம் மற்றும் தோழமை நிறைந்த இந்த சிறப்பு நிகழ்வை எங்களுடன் இணைந்து கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!

Houston Welcomes

Dear South Central Nagarathars,
Greetings,
We (Houston Nagarathars) are delighted to announce that we will host Pillaiyar Nonbu 2024! This year, we are so excited to bring our community together for a one-day event from December 28th (Saturday) 1:00 PM to December 29th (Sunday) 12:00 PM
We warmly invite you to join us for this special occasion filled with tradition, celebration, and camaraderie.
Looking forward to seeing you there!